கட்டுப்பாடு அவசியம்
UPDATED : ஏப் 03, 2025 | ADDED : ஏப் 03, 2025
'உங்களின் குழந்தைப்பருவம் போனதால் பிரார்த்தனை, நற்செயல்களில் இனி ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் எந்தக் காலத்தில் இதை ஈடுகட்டப் போகிறீர்கள்' என இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் நபிகள் நாயகம். அதிலும் இளமைக் காலத்தை வழிபாட்டிற்காக பயன்படுத்துவது அவசியம் என்கிறார். இல்லாவிட்டால் ஷைத்தான் உங்களை வேட்டையாடி விடும். அதாவது காமம், கோபத்தால் தவறான பாதைக்கு செல்ல நேரிடும். உங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் இறந்த பிறகு விசாரணைக்காக இறைவன் முன்பு நிறுத்தப்படுவீர்கள். அப்போது, 'இளமை காலத்தை வீணாக்கி விட்டேனே' என புலம்ப நேரிடும். சுகபோகம் நிறைந்த சுவனத்தில் வாழ்ந்த ஆதம், ஹவ்வா தம்பதிகள் கட்டுப்பாடுகளை மீறியதால் சுவர்க்க வாழ்வை இழந்தனர். துன்பம், சோதனைகள் நிறைந்த பூமிக்கு அனுப்பப்பட்டனர். கட்டுப்பாடுடன் வாழ்பவனே இறைவனுக்கு விருப்பமானவன்.