நல்லதை பேசு
UPDATED : ஏப் 24, 2025 | ADDED : ஏப் 24, 2025
சிலருக்கு எதைப் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரிவதில்லை. பலரோ பயனற்ற விஷயத்தை குறித்து பல மணி நேரம் பேசுவர். இதனால் நேரமும், ஆற்றலும்தான் வீணாகும். இல்லையெனில் பிறரை குறித்து தவறாக பேசுவர். இப்படி ஓயாமல் பேசுபவரின் மனம், அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கும் அமைதிக்கும் வெகுதுாரம். பேச்சால் பிறரை வாழ்த்தவும் முடியும். மனதை நோகச் செய்யவும் முடியும். எனவே பயன் தரும் நல்ல விஷயத்தை பேசுங்கள்.