உள்ளூர் செய்திகள்

நண்பன்

ஒருவருக்கு நண்பர்கள் அமைவது வரம். ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன் அவரிடம் உள்ள நல்ல பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நண்பன் நறுமணம் கமழும் கஸ்துாரிக்கு சமம். தன்னிடம் உள்ள நறுமணத்தை அவன் உங்களுக்கும் சிறிது கொடுக்கலாம். இல்லை அவரிடம் உள்ள நறுமணத்தை நீங்கள் நுகரலாம். ஆனால் கெட்ட நண்பனோ பட்டறையில் உலை ஊதுபவனுக்கு சமமாவான். ஒருவேளை நெருப்பு உங்களின் ஆடையை எரிக்கலாம். அல்லது புகை நாற்றம் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.