உள்ளூர் செய்திகள்

நாடு போற்றும் நல்லவர்

காலித் பின் வலித் என்பவர் படை வீரராக இருந்தார். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போரிலேயே கழித்தார். மரணத் தருவாயில், 'இறைவா... பல போர்களில் நான் ஈடுபட்டேன். போர்க்களத்தில் என் உயிர் போயிருந்தால் சுவனம் சென்றிருப்பேனே' என வருந்தினார். இதையறிந்த மன்னர், 'இவரே உயர்ந்த மனிதர்' என கண்ணீர் சிந்தினார். காலித்தின் இறப்பைக் கண்டு மெதீனா நகரமே வருத்தப்பட்டது. உயர் பதவியில் இருந்து தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. மனம் இருந்தால் சாதாரண படைவீரரும் நாடு போற்றும் நல்லவராக வாழலாம்.