மூன்று முறை
UPDATED : மே 08, 2025 | ADDED : மே 08, 2025
நாயகம் பற்றி அவரது மனைவி ஆயிஷா கூறுவதை கேளுங்கள். இரவில் துாங்கும் முன்பு தன் உள்ளங்கைகளை சேர்த்து வைத்தபடி, 'குல் வல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', 'குல் அஊது பிரப்பிந் நாஸ்' ஆகிய அத்தியாயங்களை அவர் ஓதுவார். பிறகு கைகளால் தலையில் ஆரம்பித்து முகம், உடலின் முற்பகுதி வரை தடவி கொள்வார். இவ்வாறு மூன்று முறை தினமும் செய்வார்.