பேசினால் ஜாக்கிரதை
UPDATED : மே 30, 2025 | ADDED : மே 30, 2025
அவதுாறு, புறம் பேசுதல் கூடாது. இறந்த ஒருவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை பேசுங்கள். ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி பலர் முன்னிலையில் பழிப்பது பாவச்செயல். அந்த பழிச்சொற்கள் வானுலத்திற்குச் செல்லும். அங்கு அதன் கதவுகள் அவற்றை அனுமதிக்காமல் மூடிக் கொள்ளும். பின்னர் வலப்புறமும், இடப்புறமும் சுற்றி அலைந்து விட்டு, இடம் இல்லாமல் யார் பழித்தாரோ அவரை நோக்கி திரும்பி விடும்.