ஸபா மர்வா
UPDATED : ஜூன் 05, 2025 | ADDED : ஜூன் 05, 2025
ஜம் ஜம் நீருற்று பொங்குவதற்கு முன் ஹாஜிரா குன்றுகளுக்கு இடையே அங்கும் இங்கும் ஓடினார். அந்த குன்றுகளில் ஒன்றின் பெயர் ஸபா, மற்றொன்றின் பெயர் மர்வா. 350 மீட்டர் இடைவெளியில் இரண்டு குன்றுகளும் உள்ளன. உம்ராவின் போது இந்த இரண்டு குன்றுகளுக்கும் இடையே ஏழுமுறை நடப்பது என்ற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நடைக்கு 'ஸயீ' என்று பெயர். காபாவுக்குச் சென்று இறைவனைப் போற்றுவதற்கு உம்ரா என்று பெயர்.