உள்ளூர் செய்திகள்

முதல் மாதம்

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. மக்களாட்சியின் மாண்பைக் காக்க நபிகள் நாயகத்தின் பேரன் ஹலரத் ஹுசைன் (ரலி) கர்பலா களத்தில் தன் உயிர் நீத்த நிகழ்வு இந்நாளில் தான் அரங்கேறியது. நாயகத்தின் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இந்த மாதத்திற்கு சிறப்பை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரியக் கூடாது. யூதர்களும் இந்நாளில் நோன்பு இருந்தனர். பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) வையும், அவரது மக்களையும் காப்பாற்றிய பெருமை இந்த மாதத்திற்கு உண்டு. மொகரம் பத்தாம் நாளில் மூஸா (அலை) நோன்பு நோற்றார். மொகரம் மாதத்தின் 9, 10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். இந்நாளிலே நோன்பு வைப்பது பாவங்களை போக்கும்.