உள்ளூர் செய்திகள்

நீங்களே சாட்சி

நபிகள் நாயகத்தின் நண்பரான சஅத் பின் உபாதா ஒருமுறை வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது தாயார் இறந்து விட்டார். இதைச் சொல்லி வருந்திய அவர், ''இறந்து போன என் தாயாரின் நினைவாக தர்மம் செய்ய விரும்புகிறேன். இதனால் அவருக்கு நன்மை கிடைக்குமா'' எனக் கேட்டார். அதற்கு அவர், '' நிச்சயமாக'' என்றார். உடனே உபாதா, ''எனக்கு சொந்தமான மிக்ராப் (தோட்டம்) முழுவதையும் தர்மம் அளிக்கிறேன். அதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்'' என்றார்.