காப்பாற்றிய நண்பர்
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
ஒருநாள் நபிகள் நாயகம் காபாவின் அருகில் தனியாக நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த எதிரிகளான குரைஷி இனத்தவர்கள் கயிறால் பிணைத்து அவரது கழுத்தை நெரித்தனர். அப்போது தற்செயலாக அங்கு வந்த நண்பரான அபூபக்கர் போராடி அவரை விடுவித்தார். குரைஷிகள் அபூபக்கரை தாக்கவே அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டதும் அவர் இறந்துவிட்டதாக கருதி அங்கிருந்து சென்றனர். நீண்ட நேரம் கழித்து அவர் இயல்பு நிலையை அடைந்தார்.