சொல்லிக் காட்டாதே
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
பிறருக்கு உதவி செய்வது என்பது பெரிய விஷயம். ஆனால் சிலரோ ஷைத்தானின் துாண்டுதலால் உதவி பெற்றவரிடம், 'என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய். நான் மட்டும் இல்லாவிட்டால் உன் நிலை என்னாகி இருக்கும்' என குத்திக் காட்டுவர். இது பெரும் பாவம். மற்றவர் முன்னிலையில் தற்பெருமைக்காக செலவழித்தும், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், தீவினைகளில் ஈடுபட்டும் ஸதக்காவை (தர்மம்) பாழாக்கி விடாதீர்கள். அப்படிச் செய்பவன் வழுக்குப் பாறையைப் போன்றவன். அந்தப் பாறை மீது சிறிது மண் ஒட்டியிருக்கும் அல்லவா. அதுதான் அவன் செய்த தர்மம். அதன் மீது மழை பெய்தால் மண் முழுவதும் வழுக்கி ஓடிவிடும். அதுபோல ஒருவருக்கு உதவி செய்ததை சொல்லிக்காட்டினால் நன்மை அனைத்தும் மறையும்.