உங்கள் மனதில் இறைவன்
UPDATED : ஜூலை 25, 2025 | ADDED : ஜூலை 25, 2025
தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த நபிகள் நாயகம், ''உங்களின் அந்தஸ்து என்ன என்பதை நான் சொல்லட்டுமா'' எனக் கேட்டார். ஆர்வமுடன், ''சொல்லுங்கள்'' என்றனர். ''உங்களுடைய மனதில் இறைவன் மீது எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என பாருங்கள். அந்தளவுக்குத் தான் அவனும் உங்களிடத்தில் நம்பிக்கை வைப்பான்'' என்றார்.