பரிசு கிடைக்க...
UPDATED : அக் 07, 2025 | ADDED : அக் 07, 2025
ஒழுக்கத்தை உயிராக கருதுபவருக்கு மறுமை நாளில் சொர்க்கம் பரிசாக கிடைக்கும். சொர்க்கத்தில் உள்ள சுகங்களை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த இன்பத்திற்கு நிகரான இன்பம் எங்கும் இல்லை. உதாரணமாக அங்கு சண்டை இருக்காது. மரணம் என்பதே கிடையாது. பலவித இன்ப அனுபவங்கள் நிறைந்திருக்கும். ஆனால் சொர்க்கத்தில் நுழைய சில கஷ்டங்களை சந்தித்தாக வேண்டும். வாழும் காலத்தில் சிரமத்திற்கு ஆளானால் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் தான் 'சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது' என்கின்றனர். கோபம், பேராசை, பொறாமை குணம் கொண்டவர்கள் நரகம் செல்வார்கள். இதனால் தான் 'தீய ஆசைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது' என்கின்றனர்.