உள்ளூர் செய்திகள்

நேர்மைக்கு பரிசு

ஆலிவ் எண்ணெய் விற்பவர் நிஷார். வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லை. அதனால் கலப்படம் செய்து விற்றால் லாபம் கிடைக்கும் என எண்ணினார். அதன்படி வாடிக்கையாளர் ஒருவரிடம் விற்றார். அன்றிரவு கனவில் வானவர்கள் தோன்றி, 'கலப்படம் செய்து விற்றதால், உன்னிடம் இருந்து பரக்கத்(வளம்) நீக்கப்படும்' என எச்சரித்தனர். பதட்டமுடன் எழுந்த நிஷார், மறுநாளே வாடிக்கையாளரைச் சந்தித்தார். ''கலப்பட பொருளை விற்ற என்னை மன்னியுங்கள்'' என்றார். அன்று நிம்மதியாக துாங்கினார். நேர்மைக்கு பரிசாக அவர் நினைத்ததை விட லாபம் பெருகியது.