உள்ளூர் செய்திகள்

தலைமைப்பதவி கிடைக்குமா...

ஆண்டு தோறும் அரேபியா நாட்டின் முக்கியமான பகுதிகளில் விழாக்கள் நடைபெறும். ஒருசமயம் உக்கால் என்னும் இடத்தில் விழா நடந்தது. அங்கு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் வந்திருந்தனர். அப்போது அங்கு சென்ற நபிகள் நாயகம் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைத்தார். பனுா ஆமிர் என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பர்ராஸ் என்பவர் இவரது பேச்சைக் கண்டு, ''இவர் மட்டும் எனக்குக் கிடைத்தால் அரேபியா தேசம் முழுவதையும் வசப்படுத்தி விடுவேன்'' என கூறினார். பிறகு நாயகத்திடம், ''நான் உங்களுக்குத் துணையாக இருந்து பகைவர்களை எல்லாம் வென்றால், உங்களுக்குப் பிறகு தலைமைப் பதவி எனக்குக் கிடைக்குமா'' எனக்கேட்டார். அதற்கு அவர், ''அது இறைவன் கையில் இருக்கிறது'' என சொன்னார்.