நல்ல ஒழுக்கம்
UPDATED : நவ 17, 2023 | ADDED : நவ 17, 2023
ஒருமுறை கைது செய்து வானத்திற்குக் கொண்டு போகப்பட்ட ஜின்களில் இப்லீஸும் இருந்தான். இவனுக்கு 'அஜாஜீல்' என்ற பெயரும் உண்டு. அவன் வானவர்களுடன் உறவாடி பல நல்ல குணங்களைப் பெற்றான். வானவர்களைப் போலவே அவனும் இறை வணக்கத்தில் அதிகம் ஈடுபட்டான். அவனின் நல்லொழுக்கமும் தியானமும் அந்தஸ்தை உயர்த்தியது. இதனால் முதல் வானத்தலிருந்து இரண்டாம் வானம், இதிலிருந்து மூன்றாம் வானம் என படிப்படியாக உயர்ந்து ஏழாம் வானத்திற்கே உயர்த்தி விட்டது. பிறகு முக்கியமான வானவர்கள் இறைவனிடம் பரிந்துரை செய்து அவன் சுவர்க்கத்தில் வாழ வகை செய்தனர். இதனால் இப்லீஸ் வானவர்களுக்குப் பாடம் போதிக்கும் பதவியைப் பெற்று, அர்ஷின் காலுக்கடியில் சிவப்பு மரகதத்திலான ஆசனத்தில் தங்குமிடமாகப் பெற்றான். அப்பொழுது அவன் தலை மீது ஒளியிலான கிரீடம் சுடர்விட்டுப் பிரகாசித்தது.