உள்ளூர் செய்திகள்

நன்றியனைத்தும் உனக்கே

நபிகள் நாயகம் புதிய ஆடையை அணியும் போது அதன் பெயரைச் சொல்லியபடி, 'இறைவனே. நன்றியனைத்தும் உனக்கே. நீயே எனக்கு இதனை அணிவித்தாய். நான் உன்னிடம் இதன் நன்மையைக் கேட்கின்றேன். இது எந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையான அம்சத்தைக் கோருகின்றேன். இந்த ஆடையின் தீமையான அம்சத்தை விட்டும் என்னை பாதுகாக்க வேண்டுகிறேன்' என சொல்வார். அதாவது அந்த ஆடையை உடுத்தியிருக்கும் நேரத்தில் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும். தீமையான செயல்கள் எதுவும் செய்யக்கூடாது என்று அவர் கேட்கிறார். எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைக்கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.