உள்ளூர் செய்திகள்

நான் முதல்வனாக இருக்கிறேன்

இறைத்துாதரான மோசே - மூஸா (அலை) குறித்த காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்தார். அப்போது அவர் ''உன்னை எனக்கு காண்பிப்பாயாக. நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' என இறைவனிடம் வேண்டினார். ''நீ இந்த உலகத்தில் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்து நின்றால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்'' என்று கூறினான். பின் அவன் தன் பேரொளியில் ஓர் ஒளிக்கீற்றை பாய்ச்சவே, அந்த மலை அடுத்த நொடியே துாள்துாளானது. மூஸா திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். சுயநினைவு பெற்றதும், ''நீ மிகவும் பரிசுத்தமானவன். உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். உன்னை பார்க்காமலே நம்பும் மக்களில் நான் முதல்வனாக இருக்கிறேன்'' என மூஸா தெரிவித்தார்.