நோன்பின் நோக்கம்
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
எத்தனையோ நோன்பாளிகள் (நற்பேறற்றவர்களாய்) உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும் (நோன்புக்கால இரவுகளில்) தராவீஹ் தொழுபவர் பலர் உள்ளனர். (தராவீஹ் தொழுகையின் மூலம்) கண் விழித்திருந்ததைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. நோன்பின் போது அதன் நோக்கத்தை கவனத்தில் வைக்க வேண்டும்.