கவனம் தேவை
UPDATED : டிச 22, 2023 | ADDED : டிச 22, 2023
'உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக இறைவன் உங்கள் மீது கருணை கொண்டவனாக இருக்கிறான்' எந்தப் பொருளைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறாரோ மறுமையில் அந்த பொருளால் அவர் வேதனைக்கு ஆளாவார். இரும்பைக் கொண்டு தற்கொலை செய்தால் நரகத்தில் இரும்பால் வயிற்றில் குத்திக் கொள்ள நேரிடும். விஷம் அருந்தினால் மறுமையில் விஷத்தால் துன்பம் உண்டாகும். நிரந்தரமாக இந்த வேதனை நடந்து கொண்டே இருக்கும். எனவே கவனமாக இருக்கவும்.