பரிசுத்தமான பூமி
UPDATED : டிச 29, 2023 | ADDED : டிச 29, 2023
பூமியில் வாழ்ந்த ஜின் வர்க்கம் சிறிது காலம் நேர்மையாகவும், பின் இறை நிராகரிப்பிலும் இறங்கின. இவர்களைத் திருத்துவதற்காக தான் பொறுப்பு ஏற்பதாக கூறினார் இப்லீஸ். உதவிக்காக சில வானவர்களைத் தனக்கு தருமாறு கேட்க இறைவனும் ஒப்படைத்தான். இவர்களில் ஒருவரை தன் துாதுவராக பூமிக்கு அனுப்பினார் இப்லீஸ். அவரை ஜின்கள் துன்பப்படுத்தியதால் தப்பித்தோம் பிழைத்தோமென்று வானுலகம் திரும்பினார். இதனால் தனக்கு பெரும் படையை தருமாறு கேட்டார். அவனும் கொடுக்கவே, ஜின் வர்க்கத்தின் கொட்டம் அடங்கியது. இதனால் பூமி பரிசுத்தம் அடைந்தது.