உள்ளூர் செய்திகள்

பொறுமை அவசியம்

நமக்கு மட்டும் ஏன் பிரச்னை வருகிறது. மற்றவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களே என பலரும் ஏங்குகின்றனர். உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா என்றால் இல்லை. மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு குறை, நிறைகள் இருக்கத்தான் செய்யும். அதை விட்டுவிட்டு, அவர்கள் வீடு வாங்கிவிட்டார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து விட்டது என வருந்தாதீர்கள். உங்களுக்கும் ஒரு காலம் வரும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். அதோடு துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். இதற்கு நற்கூலி உண்டு. துன்பம் அடைந்தவர் எவ்வளவு நன்மை அடைந்தாரோ, அதற்கு சமமான நன்மை ஆறுதல் சொன்னவருக்கும் கிடைக்கும்.