நண்பர்களை சந்தித்தால்...
UPDATED : ஜன 26, 2024 | ADDED : ஜன 26, 2024
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்தால் அவர்களிடம் 'வாழ்வில் பிடிப்பு வைக்கக் கூடாது' என்ற அறிவுரையை சொல்லுங்கள்.* உலகை விட்டு விடைபெறப் போகும் மனிதனின் மனநிலையில் தொழுகையில் ஈடுபடுங்கள்.* ஒருவரைப் பற்றி பேசி விட்டு பின் வருத்தம் தெரிவிக்கும் விதமாக தீய வார்த்தைகளைப் பேசாதீர்கள்.* மக்களிடம் உள்ள பொருளைக் குறித்து நிராசை அடையுங்கள். (மற்றவர் பொருட்களைக் கவரவோ அல்லது பொறாமைப்படவோ கூடாது)இந்த அறிவுரைகளை கீழிருந்து படித்தால் ஒரு உண்மை புரியும். பொருள் மீதான பற்றைக் குறைத்தால், தேவையில்லாத வார்த்தைகள் வாயில் இருந்து வராது. பேச்சு குறைந்தால் இறை சிந்தனையில் மனம் ஈடுபடும். இதனால் அவனிடம் பொருட்களைக் கேட்காமல், நற்கதியை கேட்கும் மனநிலை இருக்கும்.