கோபத்தை தவிருங்கள்
ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமையும் மனிதர்களின் செயல்கள் இறைவன் முன்வைக்கப்படும். இந்த நாளில் இணைவைப்போரின் பாவங்களைத் தவிர ஏனையோரின் பாவங்களை அவன் மன்னித்து விடுகிறான். எனினும் தங்களுடைய இதயங்களில் குரோதத்தையும் (கோபம்), பொறாமையையும் தேக்கி வைத்துக்கொண்ட இரு சகோதரர்கள் இருந்தால் அவர்களை பார்த்து, 'இவர்கள் இருவரையும் அவர்களின் நிலையிலேயே விட்டுவிடுங்கள். இருவரும் ஒரு முடிவுக்கு வரும்வரை இதே நிலையில் இருக்கட்டும்' என சொல்வான். 'ஷாபான் மாத 15வது இரவில் அவன் தன் அடிமைகளின் நிலைமைகளை உற்றுப் பார்க்கிறான். அப்போது அவன் தன்னிடம் மன்னிக்க மன்றாடுபவர்களை மன்னித்து விடுகிறான். தன் கருணைக்காக கெஞ்சுபவர்களுக்குத் தன் கருணையை அருள்புரிகிறான். குரோதம் கொண்டவர்களை அப்படியே விட்டுவிடுகிறான்'இப்படி ஒரு மனிதன் குரோதம், பொறாமையை மனதில் இருந்து நீக்காமல் வைத்திருந்தால் நரகத்தின் தீயில் இடப்படுவான்.