அழகிய ஐந்து பொருட்கள்
குறிப்பிட்ட சூழலில் நீங்கள் பேசும்முன் பலமுறை சிந்தியுங்கள். அந்தச் சூழலில் வாயைத் திறப்பது அவசியமா என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். தேவையில்லாத நேரங்களில் பேசுவதை தவிர்ப்பது நிறைய சன்மானங்கள் பெற்றுத் தரும் ஒரு வணக்கமாகும். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) கீழ்கண்டவற்றை சொல்கிறார்:கால்களில் கறுப்புக்கோடுகள் கொண்ட அழகிய குதிரைகளை விட, விலை உயர்ந்த அழகிய ஐந்து பொருட்கள் இருக்கின்றன. அவை 1. பொழுதுபோக்காக பேசாதீர்கள். அது பலனற்றது. கெடுதலானது. 2. பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் பயனுள்ள முறையில் பேசுங்கள். 3. விவாதத்தில் ஈடுபடாதீர்கள். மீறி விவாதிக்கும் போது அறிவுடையவர் உங்கள் மீது கோபப்படுவார். அறிவற்றவரோ தீமை செய்வார். 4. உங்களுடைய சகோதரர் அருகில் இருக்கும் போது எப்படி பேசுவீர்களோ அப்படியே அவர் அருகில் இல்லாத போதும் பேசுங்கள். 5. நல்ல விஷயங்களை பேசும் போதும், நல்ல செயல்களை செய்யும் போதும் நற்கூலி கிடைக்கும்.