மனம் துடிக்குதே...
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
மனிதன் மரணமடையும் போது அவன் மனதில் மூன்று எண்ணங்கள் பொங்கிக் கொண்டிருக்கும். முதலாவதாக தான் சேர்த்த செல்வம் அவனுக்குத் திருப்தி அளிக்காது. 'இன்னமும் வேண்டும்' என மனம் துடிக்கும். இரண்டாவதாக தான் சாதிக்க நினைத்த சாதனைகளை செய்ய முடியவில்லையே என ஏங்கும். மூன்றாவதாக வரப்போகும் மறுமைக்காக தான் எதுவும் எடுத்துச் செல்லவில்லையே என பரிதவிக்கும். செல்வம் என்பது பணமல்ல. உலகப்பற்று அறுந்து விழும் போது தான் ஒரு மனிதன் செல்வந்தன் ஆகிறான்.