உள்ளூர் செய்திகள்

செல்வாக்கு மிக்கவர்கள்

குரைஷிகள் தங்களைத் தாக்கக் கூடும் என்பதை நபிகள் நாயகமும் தோழர்களும் அறிந்திருந்தனர். இதனால் மெதீனாவுக்கு வந்தது முதல் காவல் காத்தனர். அந்தக் கால கட்டம் இஸ்லாத்துக்கு சோதனை மிக்கதாக இருந்தது. மேலும் குரைஷிகள் தங்களுக்குக் கீழுள்ள கூட்டத்தாரை இஸ்லாத்துக்கு விரோதமாகத் துாண்டி விட்டனர். அரேபியர்களுக்கு காபா பொதுவான வணக்கத் தலமாக இருந்தது. குரைஷிகள் அதன் மேற்பார்வையாளர்களாக இருந்ததால் செல்வாக்கு மிக்கவராக இருந்தனர்.