உள்ளூர் செய்திகள்

தற்பெருமையால்...

ஹஜ்ரத் ஆதம் (அலை) தொடர்பாக இறைவன் தரும் விளக்கம் இது.ஆதமைப் படைத்ததும் பூமியிலுள்ள எல்லாப் பொருள்களின் பெயர்களையும், அவற்றின் தன்மைகள் குறித்தும் கற்றுக் கொடுத்தோம். பின்னர் மலக்குகளிடம் (படைப்பினங்களில் ஒன்று), 'ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதியாவதற்கு தகுதி இல்லை எனக் கூறினீர்களே! இதோ உங்கள் முன்னிருக்கும் இவற்றின் பெயர்களை நீங்கள் அறிவியுங்கள்' எனக் கூறினான். அதற்கு அவர்கள் அறிவிக்க முடியாமல், 'நீ மிகத் துாய்மையானவன். எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர வேறொன்றையும் நாங்கள் அறியோம்' எனத் தெரிவித்தனர். பின் 'ஆதமே! எல்லா பொருட்களின் பெயர்களையும் அவர்களுக்கு அறிவியும்' எனக் கூறினான். மலக்குகளுக்கு அவற்றின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. பின்னர் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு பணிந்து 'ஸுஜூது' செய்யுங்கள்' எனக் கூறிய போது அனைவரும் செய்தனர். இப்லீஸைத் தவிர. அவனோ தற்பெருமையால் நம்முடைய கட்டளையை நிராகரிப்பவனாகி விட்டான்.