எது தற்பெருமை
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
ஒருநாள் உரையாற்றிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அவர், ''யாருடைய மனதில் தற்பெருமை இருக்குமோ அவர் சுவனத்தில் நுழைய முடியாது'' என்றார். அதற்கு ஒருவர், ''நல்ல ஆடைகளும், காலணிகளையும் அணியும் ஒருவர், தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று தானே பொருள். இது எப்படி தற்பெருமையாகும்'' என சந்தேகம் கேட்டார். '' மனம், உடல் துாய்மையை மட்டுமே விரும்புகிறான் இறைவன். அவனுக்கு அடிபணிய மறுப்பது, கடமையை நிறைவேற்றாமல் இருப்பது, பிறரை இழிவாகக் கருதுவதே தற்பெருமை'' என்றார்.