விருப்பமானவர் யார்
UPDATED : மே 10, 2024 | ADDED : மே 10, 2024
ஒருமுறை வான துாதரான மூஸா, ''என் அதிபதியே. அடியார்களில் உமக்கு விருப்பமானவர் யார்'' எனக் கேட்டார். அதற்கு இறைவன், ''பழி வாங்கும் சக்தி இருந்தும் யார் ஒருவர் பிறரை மன்னிக்கிறாரோ அவரே அன்பிற்கு உரியவர்'' என்றான். தீமையே செய்தவரையும் பழி வாங்காதீர்கள். அவருக்கு நன்மை செய்யுங்கள். இதனால் மறுமைநாளில் நன்மை அடைவீர்கள்.