தன்னந்தனியே...
UPDATED : மே 17, 2024 | ADDED : மே 17, 2024
சுவர்க்கத்தில் ஹஜ்ரத் ஆதம் (அலை) சுவைத்த முதல் பழம் திராட்சை. அங்குள்ள சோலைகளில் பழங்களை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தார். ஆனாலும் தனிமை அவரை வாட்டியது. துணைக்கு ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். இதைப் போக்க இறைவன் முடிவு செய்தான். ஒருநாள் ஹஜ்ரத் ஆதம் கண் அயர்ந்து கனவு உலகில் சஞ்சரித்தார். அப்போது அவரது இடப்புற விலாவில் இருந்து அவருக்கு துணையாக ஹஜ்ரத் ஹவ்வா (அலை) படைக்கப்பட்டார்.