அறிவிப்பு வந்தது
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
நபிகள் நாயகம் குர்ஆன் அறிவிப்பு (வஹீ) பற்றி சொல்கிறார். நான் நடந்து சென்ற போது வானில் இருந்து வந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். அங்கே முன்னொரு நாளில் 'ஹிரா'வில் சந்தித்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்கும் இடையே ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு பயந்தேன். உடனே வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம், 'எனக்குப் போர்த்தி விடுங்கள்' எனச் சொன்னேன். அப்போது இறைவன், 'போர்வையில் போர்த்தி இருப்பவரே. உம்முடைய ஆடைகளைத் துாய்மையாக வைத்திருப்பீராக. தீமையில் இருந்து விலகியிருப்பீராக' என்னும் வசனங்களை அருளினான். பின்னர் அறிவிப்பு (வஹீ) தொடர்ந்து வர ஆரம்பித்தது.