தாயாருக்கு நன்றி
UPDATED : ஜூன் 27, 2024 | ADDED : ஜூன் 27, 2024
'பெற்றோருக்கு நன்றி செலுத்துவது பற்றி மனிதனுக்கு உபதேசம் செய்தோம். தான் துன்பப்பட்டாலும் அன்புடன் குழந்தையை கருவில் சுமந்தவள் தாய். குழந்தைக்கு இரண்டு வயது வரை பாலுாட்டி வளர்த்தவள். அப்படிப்பட்ட தாய்க்கு நன்றி செலுத்துவது நம் அனைவரின் கடமை' என்கிறது குர்ஆன். கர்ப்பம், பாலுாட்டல் ஆகிய இரு காலங்களும் தாய்மைக்கு சிரமமானவை. இதனால் தாயின் அந்தஸ்து உயர்கிறது.