கவனம் தேவை
'தான் வைத்தது மட்டுமே சட்டம். தன் பேச்சை மீறி யாராவது செயல்பட்டால் போதும். உடனே அவர்களுக்கு கோபம் வந்துவிடும். எல்லாம் தன்னைக் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும்' என பலரும் ஆணவமாக செயல்படுவர். நபிகள் நாயகம் இவர்களுக்காவே ஒரு வசனத்தை சொல்லியுள்ளார். உலகம் வெளிஅழகைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுமை (மரணத்துக்குப் பிறகுள்ள வாழ்க்கை) நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மனிதர்கள் உள்ளனர். நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறிவிடுங்கள். உலக மனிதர்களாக ஆகிவிடாதீர்கள். அதாவது இந்த உலகில் நாம் என்ன வேண்டுமானாலும் பாவச்செயல்களை செய்யலாம். கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியம் இருக்கலாம். அப்படியே சிலர் கேள்வி கேட்டாலும் அவர்களை ஆட்சி, அதிகாரம், பணத்தை வைத்து ஒடுக்கி விடலாம். ஆனால் அங்கே யாரையும் அடக்க முடியாது. இங்கே செய்யும் செயல்களுக்கு அங்கே பதிலளிக்க வேண்டியிருக்கும். அப்போது பதில் சொல்ல முடியாவிட்டால் நரக நெருப்பில் வீழ வேண்டியிருக்கும். கவனமாக செயல்படவும்.