தற்பெருமை
UPDATED : ஜூலை 12, 2022 | ADDED : ஜூலை 12, 2022
தோழர் ஒருவர் நாயகத்திடம் ஆடைகளும், காலணியும் நன்றாக இருக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள் இது தற்பெருமை தானே... எனக் கேட்டார். இது தற்பெருமை இல்லை. இறைவன் துாய்மையானவன். அவன் துாய்மையை விரும்புகிறான். வாழ்க்கைக்கு தேவையான கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும், பிறரை இழிவாக கருதுவதுமே தற்பெருமை. எண்ணத்தில் அணுவளவு தற்பெருமை இருந்தாலும் அவர் சுவனத்தில் நுழைய முடியாது என பதில் அளித்தார்.