அடுத்தவருடன் ஒப்பிடாதீர்கள்
UPDATED : ஜூன் 21, 2022 | ADDED : ஜூன் 21, 2022
உங்கள் வாழ்க்கை முறைகளை அடுத்தவருடைய வாழ்க்கையுடன் ஒப்பிடுவதை தவிருங்கள். மற்றவர் வாழ்க்கையில் என்ன செய்தார்கள் என்பது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு போதும் பயன்தராது. மேலும், அவர் அடைந்த வெற்றியை பற்றி நீங்கள் சிந்திப்பதினாலும் எந்த பயனும் இல்லை. ஒப்பிடும் எண்ணத்தை கைவிடா விட்டால் பொறாமையில் சிக்கி உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்வீர்கள். எதிரிக்கு தீங்கு செய்யவும் திட்டமிடுவீர்கள். ஆகவே நீங்கள் நீங்களாக இருக்க முயற்சியுங்கள். தடைகளை தகர்க்கும் வல்லமை தானாக உங்களை வந்தடையும்.