செய்ததை சொல்லிக் காட்டாதே!
UPDATED : நவ 28, 2017 | ADDED : நவ 28, 2017
ஒரு சிறிய உதவி செய்து விட்டால் போதும். நான் அவனுக்கு அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பலர், செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனுக்கு பெரிய தண்டனை கிடைக்கும்.“சூதாடுபவன், இரக்கமற்ற கஞ்சன், செய்த உதவியை சொல்லி காட்டுபவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்,” என்கிறார் நாயகம். சொர்க்கத்துக்கு செல்ல வேண்டுமானால் செய்த உதவியை சொல்லிக் காட்டாதீர்கள்.