வீண்பழி சுமத்தாதீர்
UPDATED : ஜூலை 20, 2018 | ADDED : ஜூலை 20, 2018
'புறம் பேசுதல்' என்பது இறந்து போன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளலுக்குச் சமம்,” என்கிறது திருக்குர்ஆன். இதுபோலவே, 'இறந்து போன மனிதர்களின் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்கள். அவரைப் பற்றிய தீயவைகளைப் பேசாதீர்கள். ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாகத் தொடங்கினாரோ அவரையே சாரும். மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது, அது வானத்திற்குச் செல்கிறது. அங்கே...வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல், அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. மனிதர்களுக்குள் அன்பாக இருத்தல், கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை குர்ஆன் வலியுறுத்துகிறது.