உள்ளூர் செய்திகள்

கால்பந்தும் பிரச்னையும்

ஒரு பூ மலர வேண்டுமென்றால் நீர், காற்று, மண் மட்டுமே போதாது. இவை பூவை மொட்டு நிலைக்கு மட்டுமே கொண்டு வர முடியும். வெயில்தான் மொட்டினை மலரச்செய்யும். அதுபோல் நமக்கு வரும் பிரச்னைகளை சரியாகப் புரிந்து கொண்டால் அதுவே நமக்கு உதவும். அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது. கால்பந்தாட்டப் போட்டி ஒன்றை பலர் ரசித்துக் கொண்டிருந்தனர். கால்பந்தாட்டத்தை பற்றி தெரியாத ஒருவரும் அதில் இருந்தார். இதை பார்த்தவர் நண்பனிடம், ''அவர்கள் ஏன் கேவலம் ஒரு பந்துக்காக சண்டையிடுகிறார்கள். என்னிடம் கேட்டால் எல்லோருக்குமே ஒரு பந்தை வாங்கி தந்திருப்பேனே'' என்றார். அதைக்கேட்ட நண்பன் சிரித்தான். பார்த்தீர்களா... ஒருவருக்கு பந்து பிரச்னையாக தோன்றுகிறது. மற்றொருவருக்கு அதே பந்து வாய்ப்பாக தோன்றுகிறது. பந்தை போல்தான் பிரச்னையும். பிரச்னைகளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள்.