நல்ல குணம்
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
பகரம் செய்யும் வகையில் உறவைப் பேணக்கூடியவன் முழுமையாக உறவைப் பேணுபவன் அல்லன். பிற உறவினர்கள் தொடர்பறுத்துக் கொண்டாலும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துபவன் அதோடு அவர்களுடைய உரிமையை நிறைவேற்றுபவனே முழுமையாக உறவுகளைப் பேணுபவன் ஆவான்.அதாவது உறவினர்கள் உங்களிடம் நல்லவிதமாக நடக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் நல்லவிதமாக நடக்கிறீர்கள் என்றால் நல்லகுணம்தான். இருந்தாலும் அவர்கள் பிரச்னையால் உங்களுடன் பேசவில்லை. அப்போதும் அவர்களுடன் நல்லவிதமாக நடப்பதுதான் நல்ல குணத்தின் உயர்ந்தநிலை.