நன்மை காத்திருக்கு
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி அறிமுகம் இல்லாதவர்கள் மரணமடைந்தாலும் கூட, இறுதிஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மரணித்தவரின் குடும்பத்திற்கும், கலந்து கொள்பவரின் குடும்பத்திற்கும் இடையே நேசம் உண்டாகும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவருக்கு ஒரு மடங்கு நன்மையும், ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை காத்திருந்து வருபவருக்கு இரண்டு மடங்கு நன்மையும் கணக்கில் எழுதப்படும்.