கிடைத்தது வெற்றி
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
நபித்துவம் பெற்ற பிறகு நாயகம், 'வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே. நான் அவனுடைய துாதனாக இருக்கிறேன்' என சொல்ல ஆரம்பித்தார். இதைக்கேட்டதும் இதுநாள் வரை அவரை புகழ்ந்து கொண்டிருந்த மெக்காவாசிகள், துாற்ற ஆரம்பித்தனர். அதுமட்டும் இல்லை. அவர்கள் எதிரிகளாக மாறி நாயகத்திற்கும், அவரைச் சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தைக் கொடுத்தனர். நபிப்பட்டம் கிடைத்து 13 ஆண்டுகள் வரை, அதாவது அவரது 53வயது வரை மெக்கா நகரிலேயே பல கஷ்டங்களை சந்தித்தார். பின் அந்நகரை விட்டு மெதீனா நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு சென்ற பிறகு அவரை ஆதரித்தவர்களின் எண்ணிக்கை கூடியது. பல யுத்தங்களும் நடந்தன. இறுதியில் மெக்கா நகரம் இவரைச் சார்ந்தோர் வசம் வந்தது.