உள்ளூர் செய்திகள்

வாக்குறுதி கொடுத்தால்...

'அமானிதத்தைப் (அடைக்கலப் பொருளைப்) பேணிக் காக்காதவரிடம் ஈமானில்லை (நம்பிக்கையில்லை); வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.'இறைவனின் வேதத்தில் உள்ளவை எல்லாம் மனிதன் நிறைவேற்ற வேண்டிய அமானிதங்களாகும். அவற்றை எவர் நிறைவேற்றவில்லையோ, அவர் ஈமானின் வலிமையை இழந்துவிடுகிறார். யார் ஒருவர் பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லையோ அவர் தம் நெறியை (தீனை) இழந்தவராகிறார். எவருடைய உள்ளத்தில் ஈமான் (நம்பிக்கை) ஆழமாக வேரூன்றி உள்ளதோ, அவர் நம்பிக்கையாளராகத் திகழ்வார்.