முயன்றால் சாதிக்க முடியும்
UPDATED : டிச 30, 2021 | ADDED : டிச 30, 2021
ஐநுாறு ரூபாய் கொடுத்து துணி வாங்கியதற்கு கட்டப்பை கொடுத்தால் சிலர் மகிழ்வார்கள். சிலர் ரயிலில் எதிர்பார்த்த நாளில் டிக்கெட் கிடைத்தால் குஷியாவார்கள். இப்படி சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்படும் நாம் பெரிய விஷயங்களை முயற்சிப்பதே இல்லை. 'நம்மால் முடியும். எதையாவது புதுசா செய்யலாம்' என்ற எண்ணம் தோன்றாது. அப்படி ஒருவேளை வந்தாலும், 'நமக்கு எதுக்குப்பா வேண்டாத வம்பு' என ஒதுங்கி கொள்வோம். இதுமாதிரியான மனம் கொண்டவர்கள் எதிலும் வெற்றி பெற முடியாது. தரையில் நடக்கும் பொழுது விழுந்தால் மண்தான் ஒட்டும். நட்சத்திரங்களை தொட முயற்சி செய்யுங்கள். முடியவில்லையென்றால் நட்சத்திரங்களின் துாசாவது மிஞ்சுமே!