உள்ளூர் செய்திகள்

செல்வத்தை பெருக்கும் ரகசியம்

தர்மம் செய்தால் நம்மிடம் உள்ள செல்வம் குறையுமே என பலரும் நினைப்பதுண்டு. இது தவறான சிந்தனை. எப்படி என்று கேட்கிறீர்களா... தர்மம் செய்தால் நிகழ்காலத்தில் வேண்டுமானால் பணம் குறையலாம். ஆனால் எதிர்காலத்திற்கு தேவையான புண்ணியத்தை இப்போதே தேடிக்கொள்கிறீர்கள். அதுமட்டுமா... தற்போதுள்ள செல்வத்தை மேலும் பெருக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். இனியாவது தர்மம் செய்ய தயங்குபவர்கள் தர்மம் செய்ய முன்வரலாமே...