ஆசையே அலைபோலே...!
துன்பங்களுக்கு காரணம் ஆசையே. கோடி கோடியாக பணம் சேர்த்த பிறகும் கூட மனிதனுக்கு ஆசை அடங்குவதில்லை. தேவையற்ற பொருளை பிறருக்கு கொடுக்க மனம் வருவதில்லை. வாழ்வின் இறுதி வரை பணத்தாசையுடன் திரிகிறான் மனிதன். சம்பாதித்த பணம் கூட வராது எனத் தெரிந்தே உழல்கிறான். மனைவி, குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது அவசியமே. அதில் சிறு பகுதியையாவது தானம் செய்ய வேண்டும். ஆனால் உழைப்பை எல்லாம் தேவையற்ற வகைகளில் செலவழிக்கிறான். டிவி., இன்டர்நெட்டை பயனுள்ள விஷயங்களான படிப்பு, தொழில் சார்ந்து பயன்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் வீணாக மெகா தொடர்கள், ஆபாசத்திற்காக பயன்படுத்துவது தீங்கு தரும் என்பதை உணர்வதில்லை. அதனால் அவசியமானதை மட்டும் வாங்கி 'போதும்' என நிம்மதியுடன் வாழச் சொல்கிறார் நபிகள் நாயகம். “யா அல்லாஹ்! எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்கிறார்.