சிறிய விஷயமும் தேவையே!
UPDATED : டிச 16, 2021 | ADDED : டிச 16, 2021
இன்று பலர் பெரிய விஷயங்களை கேட்டால் எளிதாக சொல்லிவிடுவர். இதே சிறிய விஷயமாக இருந்தால் அவர்களுக்கு தெரியாது. உதாரணமாக சிலர் உலக செய்திகளை எல்லாம் கையில் வைத்திருப்பர். ஆனால் அடுத்த தெருவில் என்ன நடக்கிறது என்று சொல்லத்தெரியாது. சிறிய விதையில் இருந்துதான் பெரிய ஆலமரமே தோன்றுகிறது. அதுபோலத்தான் சிறு சிறு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து சேர்ந்துவிடும்.