மற்றவர் கருத்தை மதியுங்கள்
UPDATED : ஜூன் 10, 2022 | ADDED : ஜூன் 10, 2022
தன்மானத்துடன் வாழ விரும்புபவர்கள் சுயசிந்தனை, துணிச்சலுடன் செயல்படுவார்கள். ஆனால் இவர்களை அகங்காரம் மிக்கவர்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என நினைப்பவர்கள் என பலரும் புறக்கணிப்பதுண்டு. பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பது அல்லது அதை பரிசீலிப்பது என கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இன்னும் சிறக்கும்.