அடக்கமான பதில்
UPDATED : நவ 03, 2022 | ADDED : நவ 03, 2022
அறிஞர் கடைவீதி வழியே சென்றார். அப்போது நாய்க்குட்டி கால்களை ஊன்றியவாறு சிறுநீர் கழித்தது. இதைப்பார்த்த அவருக்கு வியப்பு. அருகே இருந்தவரிடம் ஏன் இப்படி செய்கிறது எனக்கேட்டார். அதற்கு அவரோ, ''நாய்க்குட்டி இன்னும் பருவமடையவில்லை'' எனக் கிண்டலாகச் சொன்னார். அறிஞரோ, ''அறிவு என்பது பெரிய கடல். அதில் கற்றது ஒரு துளிமட்டுமே. உலகிலுள்ளவர்களுக்கு எல்லாம் தெரியாது. எல்லாம் தெரிந்த ஒருவன் இறைவன் மட்டுமே. உம்மிடம் இருந்து இந்தச் செய்தியை கற்றது எனக்கு பெருமை. அறிவைத்தேட வெட்கப்படுபவரும், தான் அறிவாளி என பெருமைகொள்பவரும் ஒருநாளும் அறிவைப்பெற முடியாது மரணம் வரை எல்லோரும் மாணவர்கள் தான் ''என்றார் அறிஞர். அவர் வாயடைத்துப்போனார்.