உள்ளூர் செய்திகள்

முடிவு உங்கள் கையில்

''நான் நினைத்தால் எதையும் செய்ய முடியும். நான் வைத்ததே சட்டம்'' என்ற ஆணவத்துடன் செயல்படுவோர் பலர் உண்டு. 'தட்டிக் கேட்க யாரும் இல்லை' என்பதே இவர்களின் எண்ணம். இவர்களுக்காக நாயகம் ஒன்றை சொல்கிறார். மனிதர்கள் வெளி அழகை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். மரணத்துக்குப் பின்வரும் மறுமை வாழ்வு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இம்மை, மறுமை வெவ்வேறானவை. மறுமையின் மனிதர்களாக மாறுங்கள். நல்லதை செய்யுங்கள். ஆம்... இங்கே வேண்டுமானால் கேள்வி கேட்க யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் மறுமையில் பாவச்செயல்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். அழகான வாழ்க்கைக்கு அன்பு தேவை. ஆபத்தான வாழ்க்கைக்கு ஆணவம் தேவை. இதில் எது உங்களுக்கு வேண்டும்... முடிவு உங்கள் கையில்.